For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'ஸ்டார்' திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

04:40 PM Dec 09, 2023 IST | Web Editor
 ஸ்டார்  திரைப்படம் எப்போது ரிலீஸ் தெரியுமா
Advertisement

டாடா திரைப்படத்தின் நாயகன் கவின் நடித்துள்ள 'ஸ்டார்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

சின்னத்திரை நடிகரான கவின், டாடா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இப்படத்துக்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது, நடன இயக்குநர் சதீஷ் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே, பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் இயக்குநர் இளனுடன் 'ஸ்டார்' என்ற திரைப்படத்தில் கவின் இணைந்துள்ளார், லால், அதிதி போகங்கர், ப்ரீத்தி முகுந்தன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை  பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கிறார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : ”2 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்ததில் மகிழ்ச்சி” – சாய் பல்லவி நெகிழ்ச்சி!

முன்னதாக யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளையொட்டி 'ஸ்டார்' திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது. 'ஸ்டார்' திரைப்படம் காதலர் தினத்தையொட்டி வரும் பிப். 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படக்குழு புதிய விடியோவை வெளியிட்டுள்ளது. அதில் கவினின் புகைப்படங்கள் இருக்கின்றன். அதில், ரஜினி, விஜய் ஆகிய நாயகர்களுடன் இருப்பது போன்ற புகைப்பட தொகுப்பாக இருக்கிறது.  மேலும், திரைப்படத்தின் முதல் பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகுமென அறிவித்துள்ளார்கள்.

Tags :
Advertisement