For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

09:20 PM Dec 11, 2024 IST | Web Editor
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Advertisement

பிரபல நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

https://twitter.com/wunderbarfilms/status/1866838264839110718

இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், விஸ்வாசம் படம் மூலம் பிரபலமடைந்த அனிகா சுரேந்திரன், ப்ரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் முதல் சிங்கிளான 'golden sparrow' நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாடலான ஃபெயில் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் வரும் பிப்.7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது.

Tags :
Advertisement