For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'இந்தியன் 2' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

07:16 AM Jul 14, 2024 IST | Web Editor
 இந்தியன் 2  படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
Advertisement

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் - 2' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி திரைப்படம் “இந்தியன்”.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரகனி,  பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், விவேக், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் நேற்று வெளியானது.

கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இந்த இந்தியன் 2 திரைப்படம், இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு வெளியானாலும் ரசிகர்களிடையே உள்ள எதிர்பார்ப்பு இன்னும் குறைக்கவில்லை.லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

இதையும் படியுங்கள் : முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு! – அமெரிக்காவில் பரபரப்பு!

ஆனாலும், படத்தின் வசூலுக்கு பாதிப்பு வராது என்றே தெரிகிறது. காரணம், இப்படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டும் ரூபாய் 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement