For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Thangalaan படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

02:25 PM Aug 18, 2024 IST | Web Editor
 thangalaan படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா
Advertisement

தங்கலான் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.  தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில்,  சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
Advertisement