Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

3 நாட்களில் `தேரே இஷ்க் மே’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் வெளியாகியுள்ள `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது மூன்று நாள்களில், இந்தியில் மட்டும்  ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளது.
03:00 PM Dec 01, 2025 IST | Web Editor
தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் வெளியாகியுள்ள `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது மூன்று நாள்களில், இந்தியில் மட்டும்  ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்கி நடித்து கடைசியாக வெளியான இட்லி கடை படமானது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் 70 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

அந்த வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா திரைப்படம் மூலம் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிரட்டியது. இதனை தொடர்ந்து தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) திரைப்படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணியில் மூன்றாவது திரைப்படமான `தேரே இஷ்க் மே’ கடந்த 28ம் தேதி வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், டோட்டராய் சவுத்ரி ஆகியோரும் முக்கீஅ கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷின் பாலிவுட் வெற்றியையும்  தக்க வைக்கிறது.

இந்த நிலையில் `தேரே இஷ்க் மே’ திரைப்படமானது வெளியாகியுள்ள மூன்று நாள்களில், இந்தியில் மட்டும்  ரூ.50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags :
anandlroyCinemaUpdateDhanushkruthisenonlatestNewstereishkmein
Advertisement
Next Article