5 நாட்களில் ‘தேரே இஷக் மெ’ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
நடிகர் தனுஷ் - ஆனந்த எல் ராய் கூட்டணியில் வெளியான ராஞ்சனா, கலாட்டா கல்யாணம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது திரைப்படமான ’தேரே இஷ்க் மே’ கடந்த நவம்பர் 28ல் வெளியானது.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், டோட்டராய் சவுத்ரி ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
காதலை மையப்படுத்தி வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘தேரே இஷக் மெ’ படம் 5 நாட்களில் ரூ.72.71 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இப்படம் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
