10 நாட்களில் “பைசன்” படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இப்படத்தில் துருவ் உடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பைசன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோரை நேரி அழைத்து பாராட்டினார். மேலும் மதிமுக பொதுச்செயளாலர் வைகொ, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி காந்த், இயக்குநர் வெற்றி மாறன் என்று பல்வேறு தரப்பினரும் படக்குழுவை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில் பைசன் திரைப்படம் உலக அளவில் சுமார் 55 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
