மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவும், செலவும்... எவ்வளவு தெரியுமா?
மக்கள் அரசுக்கு செலுத்தும் வரிகள் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. அவற்றின் மூலம் மாநில அரசுகளுக்கு நிதியும், மக்களுக்கான திட்டங்களையும் வழங்குகிறது. அவ்வாறு நாம் செலுத்தும் எந்தெந்த வரிகள் மூலம் அரசுக்கு எவ்வளவு வருவாய் செல்கிறது எனவும், அதனை எந்தெந்த துறைகளுக்கு அரசு செலவிடுகிறது என்பதை இங்கு காண்போம்.
இதையும் படியுங்கள் : “ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை” – அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
மத்திய அரசுக்கு 1 ரூபாயில் வரவு
கடன் உள்ளிட்ட வருவாய் - 24 பைசா
வருமான வரி - 22 பைசா
ஜிஎஸ்டி, இதர வரிகள் - 18 பைசா
கார்ப்பரேட் வரி - 17 பைசா
கலால் வரி - 5 பைசா
சுங்க வரி - 4 பைசா
வரி அல்லாத வருமான ரசீது - 9 பைசா
கடன் அல்லாத மூலதன ரசீது - 1 பைசா
மத்திய அரசுக்கு 1 ரூபாயில் செலவு
ஓய்வூதியம் - 4 பைசா
இதர செலவுகள் - 8 பைசா
மத்திய நிதியுதவி திட்டங்கள் - 8 பைசா
நிதிக்குழு, பிற பரிவர்த்தனைகள் - 8 பைசா
மாநில வரிப்பகிர்வு - 22 பைசா
பாதுகாப்பு - 8 பைசா
மானியங்கள் - 6 பைசா
மத்திய அரசு திட்டங்கள் - 16 பைசா
வட்டி - 20 பைசா