For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிவு... எவ்வளவு தெரியுமா?

10:32 AM May 24, 2024 IST | Web Editor
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிவு    எவ்வளவு தெரியுமா
Advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும்,  குறைந்தும் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது.  குறுகிய கால இடைவெளியில் கிடுகிடுவென தங்கத்தின் விலை அதிகரித்து சவரன் ரூ.55,000-ஐ தாண்டியது.  இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே,  சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம்  நேற்று ரூ. 110 குறைந்து ரூ. 6750 க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 880 குறைந்து ரூ. 54,000விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,650-க்கும்,  சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.  அதன்படி, கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.96.50-க்கும்,  ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.

Tags :
Advertisement