ஆனந்த் மஹேந்திரா ஆட்டோகிராஃப் வாங்கிய ஐபிஎஸ் அதிகாரி - யார் அவர்?
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா ஐபிஎஸ் அதிகாரியுடன் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா தனது எக்ஸ் தள பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.
இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காண முடியும். அத்துடன் எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் போராட்ட வாழ்க்கையை விவரிக்கும் இப்படம் அனுராக் பதக்கின் பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 69-வது ஃபிலிம்ஃபேர் விருது விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (விமர்சகர் தேர்வு), சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் ‘12th Fail’ திரைப்படம் விருதுகளை வென்றது.
இந்த நிலையில் பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா 12th Fail படத்தின் உண்மையான நாயகனான ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மா மற்றும் அவரது மனைவியுடன் இருக்கும் படத்தையும் ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவிடன் ஆனந்த் மஹேந்திராவே ஆட்டோகிராஃப் பெற்றுக் கொண்ட படத்தையும் அவர் பதிவிட்டிருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.