For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!

04:10 PM Sep 01, 2024 IST | Web Editor
உனக்கு அறிவு இருக்கா  பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்
Advertisement

உனக்கு அறிவு இருக்கா என நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்
ஆர்பி சௌவுத்ரியின் மகனுமான நடிகர் ஜீவா, இன்று தேனியில் புதிதாக தொடங்கப்பட்ட
ஒரு ஜவுளிக்கடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது நடிகர் ஜீவா வேண்டுகோளின்படி செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அப்போது ஹேமா கமிட்டி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டவுடன்,
இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது, என்று கூறினார். தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள தங்களுக்கு எதுவுமே தெரியாது என கூறலாமா என நிருபர்கள் மீண்டும் கேட்டபோது,

அந்த விவகாரம் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். அது தவறான விஷயம் என்று
கூறினார். மேலும் தான் நீண்ட நாள் கழித்து தேனிக்கு வந்திருப்பதாகவும், இது
போன்ற நிகழ்ச்சிகளில் கேள்விகள் கேட்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கவே, கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை பார்த்து, உனக்கு அறிவு இருக்கா? எந்த இடத்தில வந்து இந்த மாதிரி கேள்வி கேட்கிறாய்? என்று கோபத்துடன் திட்டியவாறு சென்றார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் நடிகர் ஜீவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement