Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு வேலை, கல்வியில் வன்னியர்கள் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? RTI தரவு கூறுவதென்ன?

02:42 PM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

அரசு வேலைகள், கல்வியில் வன்னியர் சமூகத்தினர் 10.5% இடஒதுக்கீட்டை விட குறைவாக பெறுகிறார்களா? உண்மை என்ன? உண்மையை உடைத்த RTI தரவு.

Advertisement

சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற்றிருக்கிறார். அதில் பாமக வலியுறுத்தி வரும் 10.5 சதவிகிதம் இடஒதுக்கீடை விட அதிகமாக வன்னியர் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிரதிநித்துவத்தை பெற்று வருவது தெரியவந்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, 2018 மற்றும் 2022-க்கு இடைபட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட 24,330 மருத்துவ இடங்களில், 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 4,873 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வன்னியர் சமூக மாணவர்கள் மட்டும் 3,354 பேர் ஆவர். இது 13.8% ஆகும்.

முதுநிலை மருத்துவப்படிப்பு

இதே காலகட்டத்தில் 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவத்தில்  சேர்க்கை பெற்ற 6,966 மாணவர்களில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 13.5% இடங்களை பெற்றுள்ளனர்.

அரசுப் பணிகள்

இதே போன்று கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பணிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய தரவும் வெளியாகியுள்ளது. அதன்படி, 2013 முதல் 2022 வரை நிரப்பப்பட்ட குரூப்-IV பணியிடங்கள் 26,784-ல், வன்னியர்கள் 5,215 (19.5%) இடங்களை பெற்றுள்ளனர்.

மேலும், 2012 மற்றும் 2023 க்கு இடையில் நிரப்பப்பட்ட TNPSC குரூப்-II பணியிடங்களில், 11.2% வன்னியர் சமூகத்தினர் பெற்றிருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

இதே போன்று ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் உள்பட பல்வேறு அரசுத்துறை பணிகளிலும் வன்னியர் சமூகத்தினர் 10.5 சதவிகிதத்தை விட அதிகமாக பிரதிநித்துவம் பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவக்குமார், வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைவிட கூடுதலாகவே பெற்று தந்திருப்பதாக கூறியதை மேற்குறிப்பிட்ட தரவுகள் மெய்பிக்கின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அவர்கள் கேட்பதைவிட அச்சமூகத்தினர் அதிகமாக பெற்றிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

Tags :
Anbumani Ramadossnews7 tamilNews7 Tamil UpdatesPMKRamadossReservationSivasankarVanniyar
Advertisement
Next Article