யானைகள் ஒன்றையொன்று பெயர் சொல்லி அழைக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
யானைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதற்கு தனிப்பட்ட பெயர்களையும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரை வைத்திருப்போம், அதுவே அவரது வாழ்நாள் முழுவதும் அவரை அடையாளப்படுத்துகிறது, ஆனால் இது யானைகளிலும் நடக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் ஆச்சரியமான கண்டுபிடிப்பு யானைகள் மனிதரல்லாத முதல் விலங்குகள் தொடர்பு கொள்ள பெயர்களைப் பயன்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. கென்யாவில் உள்ள ஆப்பிரிக்க சவன்னா யானைகளின் இரண்டு காட்டு மந்தைகளின் குரல்களை செயற்கை நுண்ணறிவு வழிமுறையைப் பயன்படுத்தி ஆய்வு பகுப்பாய்வு செய்தது.
கொலராடோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் சூழலியல் நிபுணர் மைக்கேல் பார்டோ, யானைகள் தங்கள் ஒவ்வொரு துணைக்கும் வெவ்வேறு குரல்களைப் பயன்படுத்துகின்றன என்று நம்புகிறார். மேலும், யானைகள் ஒவ்வொரு யானைக்கும் குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தமக்காக எழுப்பப்படும் ஒலிகளை அடையாளம் கண்டு எதிர்வினையாற்றுவதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. மற்றவர்களுக்கு செய்யப்படும் அழைப்புகள் புறக்கணிக்கப்படுகின்றன என கூறுகிறர்.
யாராவது அவற்றை அந்த பெயர்களை வைத்து அழைக்கும்போது அவர்கள் புரிந்துகொள்கின என்கிறார். 1986-2022 இல் பதிவுசெய்யப்பட்ட யானை குரல்களை இயந்திர கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் 469 ஒலிகளை அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்மூலம் யானைகள் எப்பொழுதும் ஒன்றையொன்று அழைப்பதற்கு பெயர்களைப் பயன்படுத்துகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது .இந்த கலையை கற்றுக் கொள்ள பல ஆண்டுகள் ஆகும், அதனால்தான் வயதான யானைகள் இளைய யானைகளை விட பெயர்களை அதிகம் பெயர்களை பயன்படுத்துகின்றன. நேச்சர் எக்காலஜி & எவல்யூஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.