Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுகவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” - விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி பரப்புரை!

07:18 PM Jul 07, 2024 IST | Web Editor
Advertisement

விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

Advertisement

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 7) பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

“உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். அன்னியூர் சிவாவை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விடியல் பயணம் திட்டத்தில் இந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 500 கோடி பயணங்களை தாய்மார்கள் மேற்கொண்டுள்ளார்கள். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 8 கோடி பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளார்கள்.

புதுமைப்பெண் திட்ட மூலம் 2,72,000 மாணவிகள் மாதம்தோறும் ரூ.1000  பெறுகிறார்கள். அதிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 10,000 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைகிறார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 31,000 அரசு பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் தரமான உணவு சாப்பிட்ட பின் தான் கல்வி கற்க அமர்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 61 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டம் மூலம் பயன்பெறுகிறார்கள்.

அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் கூறிய முத்தாய்ப்பான திட்டம் தான் மகளிர் உரிமை தொகை திட்டம். அண்ணா பிறந்த நாளில் துவங்கப்பட்ட இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம் ரூ.1000 வீதம் ஒரு ஒரு மகளிர்க்கும் இதுவரை ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : INDvsZIM – ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

இதுபோன்ற திட்டங்கள் தொடர திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குறுதி 3 கோடி 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள், மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். முண்டியம்பாக்கம் முதல் கொசபாளையம் வரை, ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும். பாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும்.

ரூ.3 கோடி மதிப்பில் நடைபெறும் புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.62 கோடி மதிப்பிலான மேம்பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும். சாத்தனூர் அணையின் உபரி நீர் நந்தன் கால்வாயில் எழுதப்பட்டு விக்கிரவாண்டி தொகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் வடமலைப்பேட்டை ஏரியில் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார். நந்தன் கால்வாய் பணிகள் 25% முடிந்துள்ளது.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு புதிய காத்திருப்போர் அறை மற்றும் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட சாதனைகள் எல்லாம் தொடர திமுக அரசுக்கு கூடுதல் பாராட்டு தெரிவிக்க நடைபெறுகின்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
#UdhayanidhiStalinAnniyurSivaByElectionsCMOTamilNaduDMKMKStalinvikravandiVillupuram
Advertisement
Next Article