Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“திமுகவின் 5 பட்ஜெட்டுமே UTTER FLOP, கடன் வாங்குவதில் BLOCKBUSTER” - இபிஎஸ் விமர்சனம்!

“திமுகவின் 5 பட்ஜெட்டுமே UTTER FLOP என்றும் கடன் வாங்குவதில் BLOCKBUSTER என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
10:04 PM Mar 16, 2025 IST | Web Editor
Advertisement

உங்களில் ஒருவன் காணொளி வாயில தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 இந்திய அளவில் ஹிட் ஆனது என்று முதலமைச்சர் கூறியதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,  “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க, ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை.

தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா? உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே , மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்!

தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், "ரூ" போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார்! பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே UTTER FLOP தான்! 72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் Record Break மற்றும் Blockbuster சாதனை செய்த ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் "தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்" என்பது மக்களின் கருத்து . இந்த பட்ஜெட்…, SIMPLY WASTE..”

இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Tags :
ADMKDMKEPSMKStalinTNBudget 2025
Advertisement
Next Article