திமுக இளைஞரணி 2-வது மாநாடு தொடங்கியது!
சேலத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டு திடலுக்கு வருகை புரிந்த முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. திமுக இளைஞரணி மாநாட்டை கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 5 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என தடபுடலான உணவுகள் தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.