“2026-ம் ஆண்டு திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்” - முதலமைச்சர் #MKStalin!
2026-லும் திமுகதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதன் தொடர்ச்சியாக இன்று (05.11.2024) மாலை கோவை கெம்பட்டி காலனியில் உள்ள நகைபட்டறையில் ஆய்வு மேற்கொண்டார். பட்டறைக்கு நேரடியாக சென்று அவர்களின் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தொழில் ரீதியாக உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து சிட்கோ தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போத்தனூரில் நடைபெற்று வரும், தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
“கோவை மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. 2026ஆம் ஆண்டு திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்பதை உறுதி செய்யும் அளவிற்கு வரவேற்பு உள்ளது. தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படும். கோவை மாவட்டம் கட்சி ரீதியாக விரிவுப்படும் என தகவல் வெளியாகி உள்ளது? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இது குறித்து கட்சி முடிவு செய்யும்; அதை உங்களிடம் சொல்ல முடியாது” என தெரிவித்தார்.