Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
07:13 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று மார்ச் 12ம் தேதி (இன்று) கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் மார்ச் 12 ஆம் தேதி (இன்று) மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதில் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார். திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலை திமுக தலைமை கழகம் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
cm stalinCMO TAMIL NADUDMKMK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesTN Govtunion govt
Advertisement
Next Article