Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் - திமுக மாணவர் அணி அறிவிப்பு!

இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் திமுக மாணவர் அணியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
01:06 PM Feb 21, 2025 IST | Web Editor
இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் திமுக மாணவர் அணியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
Advertisement

இந்தியை திணிக்கும் மத்திய அரசுக்கு எதிராக 25-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில்,

“திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாள் - ‘இளைஞர் எழுச்சி நாளை’ “தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக” மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம்!

மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாஜக அரசு - தாய்த் தமிழைக் காக்க தமிழினமே களம் புகுவாய்!!

மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!

ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்!

தமிழ்நாட்டின் "இரும்பின் தொன்மை" வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி!” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags :
BJPCentral GovtDMKNews7Tamilnews7TamilUpdatesProtest
Advertisement
Next Article