திமுக மாணவர் அணியின் மாநில அமைப்பாளர்கள் கூட்டம் - முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
திமுக மாணவர் அணியின் மாநில அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று 17.05.2024 (வெள்ளிக்கிழமை)மாலை 07.00 மணியளவில், காணொலிக்காட்சி வாயிலாக (Zoom Meeting) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், இணைச் செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த. சோழராஜன் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட, மாநில மாணவர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- "நவீன தமிழ்நாட்டின் சிற்பி” மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகழினை, இளைய சமுதாயமே கொண்டாடி போற்ற வேண்டும்
-மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு கொண்டாடும் வகையில் எக்ஸ்-சமூக வலைதளத்தில் மாணவர் அணியின் தொடர் சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்பட வேண்டும்
- "மாணவ நேசன் - முத்தமிழறிஞர் கலைஞர் 100 பேச்சும் எழுத்தும்” எனும் தலைப்பில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்
- தமிழ்நாடு, புதுவை முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் “தமிழ் மாணவர் மன்றம்” ஏற்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும்
- "2024 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் சூறாவளியாய் சுழன்றடித்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் அணி செயலாளரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாணவர் அணியின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.