For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

05:01 PM Nov 05, 2023 IST | Web Editor
திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர் என் ரவி கண்டனம்
Advertisement

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தன்னை விமர்சித்து பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Advertisement

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பதாகவும், தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் குற்றம் சாட்டினார். நாகாலாந்திலே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நடந்தது என்ன தெரியுமா? ஊரை விட்டே விரட்டியடித்தனர். தப்பா நினைத்துக்கொள்ளக்கூடாது, ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன். நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பார்கள், அவர்களே அங்கு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை அனுப்பிவிட்டார்கள், அப்போது தமிழர்களாகிய நாம் என்ன செய்வோம் என பேசியதோடு, கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், இதற்கு பதில் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாகா இன மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது; நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம்.  இவ்வாறு ஆளுநர் ஆர். என். ரவி பதிவிட்டிருந்தார்.

நாகாலாந்து மக்கள் நாய்கறி உண்பவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியிருந்த நிலையில், நாகா இன மக்களை அவர் இழிவுபடுத்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement