"திமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - எடப்பாடி பழனிச்சாமி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப்போம்” சுற்றுப்பயண பிரச்சாரத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர், கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது மன்னொளியில் மிதந்த நில்கோட்டை நகரில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு எந்த திட்டமும் செய்யவில்லை. அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. அதிமுக ஆட்சியில் 67 கலைக்கல்லூரி, 11 மருத்துவக்கல்லூரி மற்றும் 7 சட்டக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 350 கோடியில் மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா நடத்தி வருகிறது. இதுதான் ஸ்டாலின் ஆட்சி. அம்மா மினி கிளினிக்குகளை 2000 மூடியுள்ளனர்.
கஞ்சா செல்போன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. போதைக்கு அடிமையாக பலர் மாறி கொலை கொள்ளை நடைபெற்று வருகிறது. திமுக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தானது. கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி் என இருக்கும் இந்த ஆட்சி வேண்டுமா.. விலைவாசி உயர்வு, திமுக ஆட்சியல் அதிகரித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்ப்பதாக கூறி ஏமாற்றிவிட்டனர். இந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் குப்பைகளை அள்ளாத, குடிநீர் வழங்காத நிர்வாகம் செய்துவ ருகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை ஆற்றில் வீசியள்ளனர்.
ஆட்சியை பிடிக்க தந்திரம் தான் இந்த திட்டம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் வீடுவீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை அவளை நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. தொண்டர்கள் ஆதரவையும், மக்களின் ஆதரவையும் திமுக இழந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.