Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்

ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார். 
06:01 PM Jul 08, 2025 IST | Web Editor
ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார். 
Advertisement

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறவுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14ம் தேதிகளில் மட்டும் நாடாளுமன்றத்தில் பணிகள் நடைபெறாது என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு, முதல்முறையாக நாடாளுமன்றம் கூடுவதால் அந்த நடவடிக்கை குறித்து விவாதம் நடைபெறும் எனத் தெரிகிறது. கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வரும் 18ம் தேதி திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக எம்.பி.க்கள் கூட்டம் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியிருப்பதாவது,

"தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18-07-2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இதில், கட்சி மக்களவை, மாநிலங்களவை தவறாது கலந்து கொள்ளுமாறு உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு திமுக பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiCMO TAMIL NADUDMKLatest NewsMK StalinTN GovtTN News
Advertisement
Next Article