For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - 5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

08:03 PM Jun 08, 2024 IST | Web Editor
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்   5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்  5முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

  மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளமும், தெலுங்கு தேசமும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளை வென்றுள்ளது. இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்த நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற எம்பிக்கள் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,  பொன்முடி,  டி.ஆர்.பாலு  உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு..

       தீர்மானம் 1

  • -இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு வெற்றிக்கு வழி நடத்திய கழக தலைவர் அவர்களுக்கும் நன்றிதீர்மானம் 2
  • கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,  40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,  இந்தியாவை வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு அழைத்துச் சென்ற மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகின்ற ஜூன் 14ஆம் தேதி அன்று கோவையில் கொண்டாடப்படும்தீர்மானம் 3

     

  • நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேச தலைவர்களின்  சிலைகளை அதே இடத்தில் வைத்திடுக  : நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த தேசப்பிதா காந்தி, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தேச தலைவர்களின் சிலைகளை அகற்றிய பிரதமர் மோடி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.  இக்கூட்டம் உடனடியாக அந்த தேச தலைவர்களின் சிலைகளை இருந்த இடத்திலே வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.தீர்மானம்4

     

  • தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை,  மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம்.தீர்மானம் 5 - நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக

     

  • இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.  இனியும் இந்த மோசடித்தனமான தேர்வு முறை அறவே கூடாது.  இத்தேர்வு முறையே முழுமையாக விளக்க வேண்டும்.  அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய அரசை  கேட்டுக்கொள்கிறது . நாடாளுமன்றத்தில் இதனை நாங்கள் எழுப்புவோம்.  மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் இந்த கோரிக்கையை கனிவுடன் கவனித்து மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
Tags :
Advertisement