"திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில் விருந்தினர் மாளிகை முன்பு மக்களை சந்தித்து பேசினார். அவருடன் குட்டியப்பா வடக்கு மாவட்ட செயலாளர், ராஜலட்சுமி முன்னாள் அமைச்சர் முத்தையா, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் உட்பட பலர் இருந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மக்களின் முகத்தில் அண்ணா திமுக வெற்றி பிரகாசமானதாக உள்ளது.
அடுத்து ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அண்ணா திமுக வெற்றி பெறும். ஸ்டாலின் வெற்றி கனவு நிறைபெறாது. ஸ்டாலின் கூட்டணி பலமாக இருந்தால் தான் வெற்றி நிச்சயம் என எண்ணி வருகிறார். நாங்கள் மக்களுடன் கூட்டணியுடன் வெற்றி பெறுவோம். திமுக என்பது கார்பிரேட் கம்பேனி ஆகி உள்ளது.
மக்கள் சிந்தித்து செயல்படுங்கள் திமுக கட்சி அல்ல கார்பிரேட் கம்பேனி.
4 ஆண்டுகளிலில் 20,000 கோடி ஊழல் ஆட்சி தேவையா, எல்லா துறையிலும் ஊழல், ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. மக்கள் நினைத்தால் தான் ஆட்சிக்கு வர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மக்கள் தான் எஜமானர்கள். 2026லேயே மக்கள் நல கூட்டணி தான் வெல்லும்.
எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்று நினைத்தது கிடையாது அவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம். அது ஒரு குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி. அந்த கார்ப்பரேட் கம்பெனியில் கருணாநிதி குடும்பம் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் திமுக குடும்பத்தைச் சார்ந்த தாளில் தான் ஆட்சிக்கு வர வேண்டும்.
நீங்களே சிந்தித்துப் பாருங்கள் அது கட்சியா இல்லை கம்பெனியா? திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கம்பெனி. நான் ஒரு விவசாயி மக்களோடு மக்களாக இருப்பேன். அஇஅதிமுக அரசில் மின்கட்டணம் உயரவில்லை. டாஸ்மாக் ஊழல்வருடத்திற்கு 5500 கோடி நாலு வருடத்திற்கு நீங்களே கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள் கிட்டத்தட்ட நான்காண்டு காலங்களில் 20 ஆயிரம் கோடி இப்படிப்பட்ட ஊழல் ஆட்சி தேவையா?
திமுக என்றால் ஊழல், ஊழல் என்றால் திமுக, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது திமுக எல்லாமே விளம்பர மாடல் ஆட்சி தான். இந்த ஆட்சியில் சங்கரன்கோவிலில் இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்து உள்ளீர்களா? எல்லாத்துக்கும் வரி போட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம். இப்படிப்பட்ட அரசு தொடர வேண்டுமா.
கொரோனோ காலம் 12 மாதங்கள் சர்க்கரை விலை இல்லாமல் கொடுத்தோம். அண்ணா திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் முன்னே நிற்கும் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம். காலணியே இல்லாத நேரத்தில் கார்பந்தயம் தேவையா. ஒரு பக்கம் கார்பந்தயம் வைக்கிறாங்க ஒரு பக்கம் பேனாவில் சிலை வைக்கிறாங்க இப்படிப்பட்டவர்கள் ஆட்சிக்கு தேவையா.
நாங்கள் திமுகவை பற்றி பேசினால் கம்யூனிஸ்ட் காரங்களுக்கு எதற்காக வலிக்கிறது. நான் திமுகவை பற்றி தானே பேசுகிறேன் தவறாக ஏதும் பேசினேனோ. எப்பொழுதுதான் நாட்டு மக்களை காப்பாற்றுவது, இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சி எத்தனை போராட்டங்களை நடத்தி உள்ளீர்கள், மக்களுடைய பிரச்சினைகளை பேசினால் தான் மக்கள் அதை நினைத்துப் பார்ப்பார்கள். இந்த பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி.
விலையில்லா மின்சாரம் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை இல்லா வீடுகள் கொடுத்தோம். நம்முடைய நெசவாளர்கள் நிறைய கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டு மக்களுக்கு நிறைய வைத்துள்ளோம். சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு உங்களை எல்லாம் பார்க்கின்ற பொழுது பெரும் பாக்கியம் அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.