“திமுக கருத்தியல் ரீதியாக எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது” - சீமான் குற்றச்சாட்டு!
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“பெரியார் விமர்சனங்களுக்கு முன்பு இருந்தே அவ்வப்போது தேர்தல் காலங்களிலும், அரசியலாக மற்றும் கருத்தியலாக என்னை எதிர்கொள்ள முடியாத சமயத்தில் இந்த நடிகை பிரச்சனையை எடுத்துக் கொள்கின்றனர்” என்றார்.
மேலும் காவல் ஆய்வாளர் ப்ரவீன் போன்றவர்களின் முறையற்ற அணுகுமுறையால் காவல் துறைக்கே களங்கம் என்றும், தனக்கு மட்டுமே வழங்கப்பட்ட அழைப்பாணையை அனைவரும் படிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன்னிலையில் ஒட்டிய அணுகுமுறையே தவறானது என்றார்.
அதேபோல் காவலாளி அமல்ராஜோ அல்லது சுபாகரோ அழைப்பாணையை ஒட்டியபோது தடுக்கவில்லை. அப்படி தடுத்திருந்தால் தவறு. ஒட்டி சென்ற பின்னர் காவல்துறைக்கு வீட்டில் என்ன வேலை?. எனக்கு அழைப்பாணை குறித்து தகவலளித்த பின்னர், எதற்கு வீட்டின் கதவில் ஒட்ட வேண்டும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
திமுக கருத்தியல் ரீதியாக அனைவரையும் எதிர்க்காமல், தனிப்பட்ட முறையில் எதிர்க்கிறது. இதை பார்க்கும் போது, அந்த பயம் இருக்கட்டும் என்ற திமிர் தனக்கு ஏற்படுவதாகவும், அண்ணாப் பலகலைக்கழக விவகாரம், சாராயம் காய்ச்சுவது, பள்ளிகளில் போதைப் பொருள் புழக்கம், கூட்டு பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் சட்டம் தன் கடமையை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.
கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பெண்ணை பேச வைத்து, தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் களங்கப்படுத்தி வருவதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணை முடிந்தவுடன் இதற்கு முடிவுக் கட்டப்படும்”. என தெரிவித்தார்.