Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக 21 தொகுதிகளில் நேரடியாக களம் இறங்குகிறது! முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் INDIA கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு!

08:55 PM Mar 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்த நிலையில், 21 தொகுதிகளில் திமுக களம் காண்பது உறுதியாகியுள்ளது. இதன்படி, இந்தியா கூட்டணி முழுமை பெற்று முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அதோடு அதிமுக, பாஜக கூட்டணிக்கு முன்பாகவே தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை திமுக படிப்படியாக இறுதி செய்து வந்தது.

இதன்படி ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடை இறுதி செய்தது. இதில் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கும் எனவும் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தனது அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடை இறுதி செய்த திமுக இறுதியாக இன்று காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தையை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை உறுதி செய்தது. இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகையும் இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அந்த திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்த 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடும் இறுதிப்பட்டியல்:

Tags :
CMO TamilNaduCongressDMKElection2024Elections2024IndiaLok Sabha Elections 2024MK Stalinnews7 tamilNews7 Tamil UpdatesParliament Election 2024selvaperunthagai
Advertisement
Next Article