Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் நடந்த அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை!” - திருமாவளவன்

10:02 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள் ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

Advertisement

சென்னையில் சர்.பிட்டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற ஈழம் குறித்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம் ,ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

Tags :
CongressDMKnews7 tamilNews7 Tamil UpdatesPoliticsSri Lankathirumavalavan
Advertisement
Next Article