For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக! கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு!

11:08 AM Jan 19, 2024 IST | Web Editor
மக்களவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக  கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 3 குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

நடப்பு மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, மக்களவைக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.  மக்களவைத் தேர்தல் தேதிகள் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தலையொட்டி அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும்  கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழு ஆகிய 3 குழுக்களை திமுக தலைமை அறிவித்தது.

இதையும் படியுங்கள் : அன்னபூரணி திரைப்பட விவகாரம் – வருத்தம் தெரிவித்த நயன்தாரா..!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.விஜயன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அப்துல்லா, எம்எல்ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும்,  நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.  இந்த குழுவில் கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, எ.வ வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உள்ளனர்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அதில், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த குழுவில், கே.என்.நேரு இ.பெரியசாமி, க.பொன்முடி,  ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த நிலையில்,  கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும்,  கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளருமான திருச்சி சிவா சேர்க்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

Tags :
Advertisement