Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு பதவியை விருதாக வழங்கியுள்ளது திமுக’- அதிமுக விமர்சனம்..!

கோவை பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள சமயத்தில், பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திமுக விருதாக வழங்கியுள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது.
06:21 PM Nov 04, 2025 IST | Web Editor
கோவை பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள சமயத்தில், பெண்களை ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திமுக விருதாக வழங்கியுள்ளதாக அதிமுக விமர்சித்துள்ளது.
Advertisement

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்மூடி. இவர் சமீபத்தில் பெண்களை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியதால் அவரது அமைச்சர் பதவியும் திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு பொன்முடி, தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகிய இருவருக்கும்  திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில் பொன்மூடிக்கு மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பதவி  வழங்கப்படுள்ளதை அதிமுக விமர்சித்துள்ளது. இது தொடர்ப்பாக அதிமுகவின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை விருதாக வழங்கி, அழகு பார்த்துள்ளது திமுக அரசு.

ஆபாசமாக, அவதூறாக,  இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் Formula. பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்லவரும் செய்தி ஒன்று தான்: திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags :
ADMKDMKlatestNewsponmudiTNnews
Advertisement
Next Article