"திமுக அரசு திவால் ஆகிவிட்டது"...."விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக" - எடப்பாடி பழனிசாமி!
திருநெல்வேலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து கருத்துக்களை கேட்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
"இன்று நாட்டில் இயற்கை விவசாயத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இயற்கை விவசாயம் விளைவிக்கப்படும் பொருட்கள், தானியங்களை மிகப்பெரிய விலை கொடுத்து மக்கள் வாங்குகிறார்கள். மணிமுத்தாறு, பாபநாசம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 14,000 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. 6000 ஏரிகளை அதிமுக ஆட்சியில் தூர்வாரினோம்.
தாமிரபரணியில் தடுப்பணைகள் கட்டுவதற்கு ஆய்வு செய்து பொறியாளர் குழுவின அறிக்கை தந்தார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார்கள். கூட்டுறவு கடன் இரண்டு முறை தள்ளுபடி செய்த அரசாங்கம், அதிமுக அரசாங்கம். விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு இனி சிபில் ஸ்கோர், ஆவணமும் தேவை. திருச்சியில் பிரதமரை நான் நேரில் சந்தித்து முறையிட்டேன். அதன் பிறகு தான் தெரிந்தது தமிழ்நாடு அரசாங்கம் இது போன்ற தடை என்று குற்றச்சாட்டு. ஆனால் தற்போது வெளியிடப்பட்டது. விவசாயிகள் கடன் பெறுவதற்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம். அதிமுக ஆட்சி நடைபெற்ற போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தற்போது ஆட்சி எப்படி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். நான் முதலமைச்சராக இருந்த போது அனைத்தும் இந்த நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் குறைபாடுகள் முதலமைச்சருக்கு தெரியாது.
முதலமைச்சராக இருந்தால் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். திமுக அரசு திவாலாகி இருக்கிறது, அவர்களிடம் பணம் இல்லை காரணங்களை சொல்லுகிறது. திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க மறுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.