Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை மறுநாள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

02:07 PM Jun 05, 2025 IST | Web Editor
Advertisement

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 7) காணொலி வாயிலாக நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisement

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7, சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
cm stalinDistrict Secretaries MeetingDMKduraimurugan
Advertisement
Next Article