Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக பவள விழா பொதுக்கூட்டம் | அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்!

10:51 PM Sep 28, 2024 IST | Web Editor
Advertisement

திமுக பவள விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்று அக்கட்சியில் சமூக பங்களிப்பு குறித்து புகழாரம் சூட்டினர்.

Advertisement

திமுக உருவாகி 75வது ஆண்டை முன்னிட்டு அண்மையில் சென்னையில் திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடந்தது. தொடர்ந்து திமுகவை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் கோலாகலமாக நடந்தது.

இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி, கருணாஸ், வேல்முருகன் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.

பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் மூத்த அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

திமுக பவளவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேச்சு:

'இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கக்கூடிய சிங்கமாக உள்ளது திமுக. பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து வந்த கட்சி திமுக. 75 ஆண்டு காலத்தில் நெருப்பாற்றில் நீந்தி கடந்திருக்கிறது திமுக. ஒப்பற்ற இயக்கமாக விளங்குகிறது திமுக என்றார்.

திமுக பவள விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு:

பெரிய அரசியல் வரலாற்றை திமுக கொண்டுள்ளது; ஆனால் இன்றளவும் இவங்களெல்லாம் ஒரு ஆளா என்று மத்திய அரசு கேட்கிறது. இதையே நாம் திருப்பி கேட்கும் நிலையில் உள்ளோம் என்றார்.

திமுக பவளவிழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு:

“சூரிய, சந்திரர்கள் இருக்கின்ற வரை, வான வெளியிலே நட்சத்திரங்கள் இருக்கின்ற வரை, ஓடுகின்ற நதிகள் இருக்கின்ற, இந்த விண்ணும், இந்த மண்ணும் இருக்கின்ற வரை ஆயிரமாயிரம் காலத்து பயிராக தமிழ் மொழி செம்மொழியாக நிலைத்து நிற்கும் என்பதனால், தன் எழுத்தாலும் பேச்சாளும், செயலாளும் செந்தமிழ் மொழிக்கு பொன்மகுடம் சூட்டிய பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக இன்று பவளவிழா கொண்டாடுகிறது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோள்களில் வீற்றிருக்கிறது என்று வைகோ பேசினார்.

திமுக பவளவிழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேச்சு:

நாளை மீண்டும் ஒரு பரிணாம வளர்ச்சியோடு உதயமாக இருக்கின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் வாழ்த்து என துணை முதலமைச்சர் பதவி குறித்து சூசகமாக பேசினார்.

திமுக பவளவிழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேச்சு:

“திமுக கூட்டணி தேர்தலுக்கு பிறகும் தொடர்கிறது என்றால், கொள்கை உறுதியால் மட்டும் தான்; கூட்டணி என்பது தொகுதி பங்கீடு அல்ல, லட்சித்தியனால் அமைவது, அது தான் திமுக கூட்டணி, எதிர்காலத்திலும் இந்தக் கூட்டணி வெற்றி பெறும். ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கங்கள். ஏதோ தொடங்கிய உடன் திமுக ஆட்சிக்கு வரவில்லை, பல்வேறு போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்திய ஒரு போராட்டக்கட்சி தான் திமுக என்று முத்தரசன் புகழாரம் சூட்டினார்.

திமுக பவளவிழாவில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேச்சு:

பவளவிழா காணும் திமுக இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டக்கூடிய மகத்தான பேரியக்கம். வெறும் தேர்தல் அரசியலை முன்னிருத்தி அதிகாரத்தை நோக்கி இயங்குகிற சராசரி அரசியல் கட்சி அல்ல. அதனால் தான் 75 ஆண்டுகளாக அதே வீரியத்தோடு வீறுகொண்டு வெற்றி நடை போடுகிற இயக்கமாகவும், திமுக 6வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது.

தேர்தலை நோக்கி மட்டும் பயணிக்கக் கூடிய கட்சி அல்ல திமுக. தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை உள்ளிட்டவை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியுடன் இருக்கும் திரவிடியன் ஸ்டாக் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌‌. 2019, 2021, 2024 என திமுக கூட்டணி தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணி உடைந்து போகாமல் இன்றைக்கும் வலுவாக இருக்கக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று திருமாவளவன் கூறினார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., பேச்சு:

“தமிழ்நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு அழைத்துச் சென்றது திமுக. தெற்கினால் வடக்கு வாழுகிற நிலைமையை திமுக உருவாக்க காரணம் திராவிட இயக்க அரசியல் நீட்சி தான்;இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது திமுக தான் என்று எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., பேச்சு:

இந்திய நாட்டில் உரிமை மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் கல்வியில், வேலைவாய்ப்பில் உரிமை வழங்க வேண்டும் என்ற சமூக நிதி இயக்கத்தின் வழித்தோன்றல் தான் இந்த திராவிட இயக்கம். மக்கள் இயக்கமாக, மக்களின் பாதுகாப்பு அரணாக திமுக இன்று வரை இருந்து வருகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகளுக்கும் சமநீதி திமுக ஆட்சியில் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசினார்.

மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் - அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை கனடா பிரதமரே பின்பற்றுகிறார்! பார் போற்றும் கட்சியாக பவள விழாவில் திமுக திகழ்கிறது!இதே சாதனைகளோடு பயணித்து நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த காலை உணவு திட்டத்தை கனடா பிரதமர் பின்பற்றுகிறார்; பார் போற்றும் கட்சியாக பவளவிழாவில் திமுக திகழ்கிறது. இதே சாதனைகளோடு பயணித்து நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டை வளர்ச்சியின் பாதைக்கு அழைத்துச் சென்றது திமுக; தெற்கினால் வடக்கு வாழுகிற நிலைமையை திமுக உருவாக்க காரணம் திராவிட இயக்க அரசியல் நீட்சி தான்;இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு வழங்கியது திமுக தான் என்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேச்சு:

நேற்று, இன்று, நாளைக்கானது இல்லை திமுகவின் சித்தாந்தங்கள் அவை நாட்டிற்கும், உலகிற்கும் உரியவை; மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தமிழ்நாட்டிற்கான வாசகம் இல்லை, இது இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கான வாசகம்; இந்திய அரசை வழிகாட்டக்கூடிய கொள்கைகள் திமுகவிற்கு உண்டு என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

Tags :
திமுகதிமுக பவள விழாதிமுக வரலாறுDMKDMK 75MK Stalintamil nadu
Advertisement
Next Article