முதலமைச்சர் #MKStalin-ஐ சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. நாதக தனித்துப் போட்டி என அறிவித்தது. அதிமுக இன்னும் போட்டி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் வி.சி.சந்திரசேகர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சி.சந்திரகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இடைத்தேர்தலில் போட்டியிடும் வி.சி.சந்திரசேகர் திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.