மத்திய அரசை கண்டித்து சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நிதி தருவோம் என்று மத்திய அமைச்சர் கூறியதற்கு திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மத்திய பட்ஜெட், மும்மொழி கொள்கை, யுஜிசி விதி, மத்திய பட்ஜெட் என எல்லாவற்றிலும் மத்திய அரசு தமிழ்நாட்டி வஞ்சித்து வருவதாகவும் திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இதையும் படியுங்கள் : இபிஎஸ் தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்!
இந்த சூழலில், மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதில், கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, பெ.சண்முகம், முத்தரசன், காதர் மொகிதீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.