2026 தேர்தலில் தேமுதிக சிறப்பான கூட்டணி அமைக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற
பயணம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
”கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான். சொந்த பணத்தில் கட்சியை நடத்துவது நாம் மட்டும்தான். களத்தில் வீரமாக பணியாற்றுபவர்கள் தேமுதிக தொண்டர்கள். உண்மையான தொண்டர்களை கொண்டது. நாம் செய்த புண்ணியம் என கேப்டன் சொல்லுவார்.கூலி வேலை செய்து கட்சியை சோர்வில்லாமல் எடுத்துச்செல்லும் தங்களை பணிந்து பாராட்டுகிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைக்காமல் எந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட முடியாது. நிச்சயமாக தேமுதிக முக்கிய அங்கம் வகிக்கும். அனைவரும் விரும்பும் கூட்டணியை நிச்சயமாக தேமுதிக அமைக்கும்.
இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையான நாகப்பட்டினம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. இவை மக்களை பாதிப்படைய செய்கிறது. இதனை கைவிட வேண்டும், மத்திய மாநில அரசுகள் இணைந்து 100நாள் வேலையை 150நாளாக மாற்றி உரிய வகையில் ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நெசவாளர்களும் விவசாயிகளும் சிறப்பாக இருந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். அப்படி விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் நன்மை செய்யும் திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.”
என்று தெரிவித்தார்.