பிப்.7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு !
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற 7ம் தேதி நடைபெறும் என தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
11:14 AM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறவுள்ளது. இது குறித்து தேமுதிக தலைமை கழகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,
Advertisement
"தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது.
வருகிற 12ந் தேதி 25 வது ஆண்டு கொடி நாள் விழாவை முன்னிட்டு முக்கிய ஆலோசனை மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.