For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

10:22 AM Jul 02, 2024 IST | Web Editor
தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்  5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்
Advertisement

தீபாவளி பண்டிக்கை டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூலை 2) காலை தொடங்கிய 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தது.

Advertisement

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சென்னை, கோவை, மதுரை,  திருச்சி போன்ற
பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் எளிய முறையில் செல்வதற்காக ரயில்களில் செல்ல விரும்புவர்.

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 ம் தேதி வருகிறது. இதற்காக தீபாவளிக்கு முன்னதாக ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அக்டோபர் 28 ஆம் தேதிக்கான முன்பதிவு டிக்கெட்டும் நேற்று அக்டோபர் 29 ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று அக்டோபர் 30 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணியளவில் தொடங்கியது. அக்டோபர் 28 மற்றும் 29 அகிய இரண்டு நாட்களாக ரயிலில் செல்பவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதும், ஐஆர்சிடிசி செயலி மூலம் புக் செய்யும் போதும் அந்த டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகின. குறிப்பாக, தென்மாவட்டங்கள் செல்லக்கூடிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனையாகின.

இதையும் படியுங்கள் : “வீட்டு உபயோக பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி” – மத்திய நிதியமைச்சகம்

தீபாவளிக்கு முன்தினமான அக்டோபர் 30 ஆம் தேதி சொந்த ஊர் செல்ல இன்று ரயில்
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் 5 நிமிடங்களில் இந்த முன்பதிவு
டிக்கெட்டுகள் காலியாகி காத்திருப்பு பட்டியல் நிலையை அடைந்தது. அக்டோபர் 31 ஆம் தேதிக்கான ரயில் முன்பதிவு நாளை தொடங்க உள்ளது. மேலும் பயணிகள் அதிகரிப்புக்கேற்ப சிறப்பு ரயில்கள் அல்லது கூடுதல் ரயில் பெட்டிகள் ஏற்பாடு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags :
Advertisement