For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளி சிறப்பு பஸ்கள் - எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்?

08:09 PM Oct 28, 2024 IST | Web Editor
தீபாவளி சிறப்பு பஸ்கள்   எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கம்
Advertisement

சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. தொடர்ந்து 4 நாட்கள் இந்த ஆண்டு விடுமுறை கிடைத்துள்ளது. எனவே சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். சிறப்பு பேருந்துகள், ரயில்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்கள் பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். சென்னையில் இருந்து இன்று இரவு முதல் புதன்கிழமை இரவு வரை ஏராளமான மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்குகிறது.

சென்னையை பொறுத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், மதுரை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி. புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, சேலம், கோயம்பத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, எர்ணாகுளம், திண்டிவனம், ஜெயங்கொண்டம், விழுப்புரம், போரூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி,திருக்கோவிலூர், அரியலூர், விருத்தாச்சலம், செந்துறை, வந்தனாரி, கடலூர், சிதம்பரம் திருவண்ணாமலை, புதுச்சேரி, திண்டிவனம், வடலூர், நெய்வேலி, காட்டுமன்னார் கோவில் செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, காஞ்சிபுரம், ஆற்காடு, வேலூர், செய்யாறு, ஆரணி, திருப்பத்தூர், ஒசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள், திருப்பதி செல்லும் பேருந்துகள், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநில மாா்க்கமாகச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். சேலம், கும்பகோணம், திருச்சி, திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படும். இந்த மூன்று பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் இன்றுமுதல் புதன்கிழமை வரை 24 மணிநேரமும் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும்.

பேருந்து, ரயில்களை தவிர்த்து சொந்த வாகனங்களில் செல்லும் மக்கள் பெருங்களத்தூா் வழியாக செல்வதைத் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக திருப்போரூா் - செங்கல்பட்டு அல்லது வண்டலூா் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement