Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!

03:32 PM Nov 06, 2023 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன் என்ற சீட்டு நிறுவனத்தை மகேஷ் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வந்துள்ளார்.  இந்நிறுவனம் ஒரத்தூர், திண்டிவனம்,  பொன்னங்குப்பம்,  வீடுர்,  மேலக்கொந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3500 நபர்களிடமிருந்து ரூ. 4 கோடி அளவிலான  சீட்டு பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் பண்டு சீட்டு நடத்திய மகேஷ் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.  இதனால் பாதிக்கப்பட்ட  சீட் ஏஜெண்டுகள் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் ஒன்று திரண்டு மனு அளித்தனர்.

இதே போன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் சபரிவாசன் என்ற நிறுவனத்தின் பெயரில் டில்லி ராஜன், புருஷோத்தமன், செந்தில்நாதன், மகேஷ் ஆகியோர் பண்டு சீட்டுகள் நடத்தி மோசடியில்  ஈடுபட்டுள்ளனர்.

Tags :
AgentsChitFundcomplaintfraudfundFundSchemescamTamilNaduVillupuram
Advertisement
Next Article