தீபாவளி என்றாலே ஸ்வீட் தான்..! - மாறும் காலம்... மாறாத மரபு...
தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான் பிரதானம். இன்றைய சூழலில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து விட்ட நிலையில், கடைகளில் தயாரிக்கப்படும் வித விதமான இனிப்பு வகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
தீபாவளி என்றால் பட்டாசு மட்டுமல்ல, இனிப்பும் அனைவரது நினைவிற்கும் வரும். சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பலகாரம் செய்வதற்கான பொருட்களை வீட்டிலே தயார் செய்து, அக்கம் பக்கத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மகிழ்வதுண்டு.
ஆனால் காலம் மாறி பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும் இன்றைய டிஜிட்டல் உலகில், குடும்பத்துடன் ஒன்றாக நேரம் செலவழிப்பதே அரிதாக உள்ளது. காலத்திற்கேற்ப மாறிக் கொண்டாலும், விசேஷ நாட்களில் இனிப்பை பகிர்ந்து கொள்வது இன்றைய காலகட்டத்திலும் வெவ்வேறு விதத்தில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பண்டிகைக்கு புத்தாடை முதல் இனிப்புகள் வரை அனைத்துமே ஆன்லைன் தளத்தில் கிடைப்பதால், நேரத்தை சேமிக்க பெரும்பாலானோர் ஆன்லைன் தளத்தையே நாடுகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்தால், நம் பாரம்பரியம் மாறாத பலகார வகைகளை சுத்தமாக தயாரித்து வீடு தேடி வந்து கொடுக்கும் வகையில் உள்ளது இன்றைய டிஜிட்டல் உலகம்.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத்தொகை : 7.35 லட்சம் புதிய பயனாளிகளுக்கு நாளை வழங்குகிறார் முதலமைச்சர்
கடைகளில் தயாரிக்கப்படும் வித விதமான இனிப்பு வகைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், அனைத்து கடைகளிலும் முறுக்கு, சீடை, செட்டிநாடு உக்கரை, அதிரசம், அல்வா, குலாப் ஜாமுன், லட்டு உள்ளிட்ட பல வகை பலகாரங்களை செய்ய ஆரம்பித்துள்ளனர் கடை உரிமையாளர்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு ஸ்பெஷலாக தயாராகும் புதிய துணி வகைகள், பட்டாசுகள் வரிசையில், தற்போது இனிப்பு மற்றும் பலகார வகைகளும் இணைந்துள்ளன.