தீபாவளி ஆட்டுசந்தை: சிவகங்கையில் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
தீபாவளியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டுசந்தையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானது.
தீபாவளியை முன்னிட்டு ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அருகே சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த ஆட்டுசந்தைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக தென்மாவட்டங்களான மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மேலூர் மற்றும் சிவகங்கையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வருகை தந்தனர். இந்நிலையில் அதிகாலை முதலே ஆட்டுசந்தை தொடங்கி, நடைபெற்றது.
இதில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.9000 முதல் ரூ.1000 வரையும், 10 கிலோ எடை கொண்ட ஒரு கிடாய் ரூ.10,000 முதல் ரூ.27,000 வரையும் விற்பனை செய்யப்பட்டது. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் ரூ. 1 கோடிக்கும் மேல் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.