தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு - பயணிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகளுக்காக, சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்கள் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை பயணிக்க, ஹஸ்ரத் நிசாமுதீன்-மதுரை தமிழ்நாடு சம்பார்க் கிராந்தி அதிவிரைவு வண்டி, ஹவுரா-திருச்சிராப்பள்ளி அதிவிரைவு வண்டி, கோரக்பூர்-கொச்சுவேலி ரப்தி சாகர் அதிவிரைவு வண்டி, மற்றும் தன்பாத்-ஆலப்புழா விரைவு வண்டி ஆகிய ரயில்களில் நாளை (ஆகஸ்ட் 17) காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது.
அதேபோல், அக்டோபர் 19 சனிக்கிழமை பயணிக்க, ஷாலிமார் (கொல்கத்தா)-திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி, டாடாநகர்-ஆலப்புழா விரைவு வண்டி, இந்தூர்-கொச்சுவேலி அஹில்யா நகரி அதிவிரைவு வண்டி, தன்பாத்-ஆலப்புழா விரைவு வண்டி, பிகானீர்-மதுரை அனுவ்ரத் AC அதிவிரைவு வண்டி, ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி, ஹஜ்ரத் நிஜாமுதீன்-கன்னியாகுமரி திருக்குறள் அதிவிரைவு வண்டி மற்றும் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல்-நாகர்கோவில் அதிவிரைவு வண்டி ஆகிய ரயில்களில் ஆகஸ்ட் 18 காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. பயணிகள் விரைந்து டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.