தீபாவளி தீப உற்சவம் | 28 லட்சம் விளக்குகளால் அலங்கரிக்கப்படும் #Ayodhya ராமர் கோயில்!
அயோத்தி ராமர் கோயிலில் தீபாவளி பண்டிகையையொட்டி 8வது தீபஉற்சவ விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு முதன்முறை நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அயோத்தியில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு முன் தீப உற்சவ நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு தீப உற்சவ திருவிழா நடைபெறும்.அந்த வகையில், தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி 8ம் ஆண்டு தீபஉற்சவ விழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள் : இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்… இருவர் கைது!
இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
" தீப உற்சவ திருவிழாவையொட்டி கடந்தாண்டு சரயு நதிக்கரையில் 22 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மண் விளக்குகளை ஏற்றி அயோத்தி மாநகரத்தை ஔிர செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தீப உற்சவத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. தீப திருவிழாவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஆறு நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.