For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்; படுமோசாமான காற்றின் தரம்!

07:24 AM Nov 13, 2023 IST | Web Editor
டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்  படுமோசாமான காற்றின் தரம்
Advertisement

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்த போதிலும், தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்ததால் தலைநகர் டெல்லியின் காற்று மாசு அடைந்துள்ளது.

Advertisement

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், தலைநகர் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏராளமான பட்டாசுகள் வெடித்தன. தீபாவளி தினமான ஞாயிற்றுக்கிழமை, பல பகுதிகளில் காலை முதலே பட்டாசு வெடித்தது, மாலை நெருங்க நெருங்க பெரிய அளவில் பட்டாசு வெடித்தது. 90 டெசிபல் ஒலி வரம்பை தாண்டிய பட்டாசுகளின் சத்தம் என்சிஆர் பகுதியில் தலைநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி வரை வெடிக்கப்பட்டது.

இதன் காரணமாக, மாசுவும் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி,  இன்று காலை (நவம்பர் 13) டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 296 ஆக இருந்தது, இது இயல்பை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

அண்மையில் மழை காரணமாக காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டால், பொதுமக்கள் மூச்சுத்திணறல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisement