For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Diwali | பட்டாசு வெடித்த போது விபத்து... 4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை! 104 பேருக்கு கண்களில் படுகாயம்!

07:04 PM Nov 05, 2024 IST | Web Editor
 diwali   பட்டாசு வெடித்த போது விபத்து    4 குழந்தைகளுக்கு பறிபோன பார்வை  104 பேருக்கு கண்களில் படுகாயம்
Advertisement

தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில், 4 குழந்தைகளுக்கு கண் பார்வையிழப்பு
ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டதாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் 104 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மதுரை, தேனி, சிவகங்கை,
இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 104 பேரில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 4 குழந்தைகளுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு கண்கள் எடுக்கப்பட்டன.

பெற்றோர்கள் கண்காணிப்பில் பட்டாசு வெடிக்காததே விபத்துக்கு முக்கிய காரணமாக
அமைந்துள்ளது. எதிர்வரும் காலங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக பெற்றோர்கள் முன்னிலையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement