For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா : திவ்ய நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

07:40 AM Jul 29, 2024 IST | Web Editor
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா   திவ்ய நற்கருணை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
Advertisement

உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று திவ்ய நற்கருணை பவனி நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் உலகப்
புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 வது ஆண்டு திருவிழா கடந்த 26ஆம்
தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு திருப்பலிகள்
நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவை முன்னிட்டு தூய பனிமயமாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்ய நற்கருணை பவனி நேற்று நடைபெற்றது. தூய பனிமயமாதா ஆலய வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திவ்ய நற்கருணை பேழையை தூத்துக்குடி கத்தோலிக்க  மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கைகளில் ஏந்தி நகர் முழுவதும் பவனியாக கொண்டு
வரப்பட்டு தூய பனிமயமாதா ஆலயம் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு
கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு அருள் ஆசி உரை
வழங்கப்பட்டது. இந்த நற்கருணை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதங்களைக் கடந்து கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள் : இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி : 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10வது திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி
கூட்டுத் திருப்பலி  ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை தூய பனிமய மாதாவின் நகர் வீதிகளில் சப்பர பவனி நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement