பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்றவை வெறுமனே "பிரச்சார வார்த்தைகள்" - எலான் மஸ்க்
" பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்றவை வெறுமனே "பிரச்சார வார்த்தைகள்" என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த வருடம் அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வந்தார். 1 நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்கமுடியும் , புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், ட்விட்டரில் விளம்பரம் செய்து பொருளீட்டுதல் , ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை மாற்றியது போன்ற புதிய புதிய மாற்றத்தை ஏற்படுத்தியன் மூலம் உலக அளவில் பேசு பொருளாக மாறினார்.
எலான் மஸ்க் அடிக்கடி உலக அளவில் உள்ள ஊடங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுவது வழக்கம். அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சையாவதும், சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளிப்படுத்துவதும் வாடிக்கையான ஒன்று.
கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை என்பது தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு அவை ஆபத்தானது, பாதுகாப்பற்றது போன்ற பிம்பம் சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்டது ஆனால், இதை பொய்யாக்கும் விதமாக தடுப்பூசியின் செயல்திறன் தொடர்பாக பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியாகின. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாக எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் வெள்ளிக் கிழமையன்று ஊடகங்களிடம் தெரிவித்த எலான் மஸ்க் “ பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய தன்மை போன்ற வார்த்தைகள் எல்லாம் வெறுமனே "பிரச்சார வார்த்தைகள்" என்று விமர்சித்துள்ளார்.