காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வருகிற ஜூலை 25ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி வரை தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.