Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சர்ச்சை பேச்சால் பதவி பறிப்பு - பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே| திமுக தலைமை நடவடிக்கை!

திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திருச்சி சிவா எம்பியை திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
11:38 AM Apr 11, 2025 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி பாலியல் தொழிலாளி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. அமைச்சர் பொன்முடி தொடர்பான சர்ச்சையான கருத்துக்கள் அடங்கிய காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

Advertisement

அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி மீது கட்சி ரீதியாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளியான அறிக்கையில் பொன்மொடியை துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு பிறகு மீண்டும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிக்கை வெளியானது. அதில் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான திருச்சி சிவா எம்பியை திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags :
கனிமொழி_கண்டனம்திமுக_நடவடிக்கைதிருச்சி_சிவா_நியமனம்திராவிடர்_கழகம்_சம்பவம்பெரியார்_கழகம்பொன்முடி_சர்ச்சைபாலியல்_தொழிலாளிசித்தலம்பட்டு_பொதுக்கூட்டம்விழுப்புரம்_மாவட்டம்minister ponmoditrichy sivatrichy siva MP
Advertisement
Next Article